16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம்

by Staff / 06-04-2023 12:05:50pm
16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம்

வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 7ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புனித வெள்ளியை முன்னிட்டு, அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேலும், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via

More stories