கட்டப்பஞ்சாயத்து பேசிய வழக்கறிஞர்,மருத்துவர் கைது.

by Staff / 17-10-2025 09:48:26am
 கட்டப்பஞ்சாயத்து பேசிய வழக்கறிஞர்,மருத்துவர் கைது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் கடந்த 03.01.25 இன்று ராமநாதபுரம் மாவட்டம் கடம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரின் மனைவி செல்வி என்ற அருள் மலர் செல்வி வயது 43 அவருக்கும் அவரது மகன் நவீன் ஆகிய இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளனர் சிகிச்சையின் பொழுது பணியில் இருந்த செவிலியர்கள் மூன்று முறை ஊசி போட்ட பின்பு செல்வி இறந்துவிட்டதாகவும் இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் கட்டப்பஞ்சாயத்து பேசியதாக வழக்கறிஞர் ஹரி பிரசாத் மற்றும் மருத்துவர் ஹாலீஸ்குமார் ஆகிய  இருவரை தேவகோட்டை நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :  கட்டப்பஞ்சாயத்து பேசிய வழக்கறிஞர்,மருத்துவர் கைது.

Share via