தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவானதாக தெரிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்சமாக நீலகிரி சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில் 5 சென்டி மீட்டரும், கோவை சின்கோனா, நீலகிரி பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டரும் மழை பதிவானதாக தெரிவித்துள்ளனர்.
Tags : தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.