ரசாயன ஆலை விபத்து.. ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்துக்கு பாய்லர் வெடித்தது காரணமல்ல என நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றும் சிக்காச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், விபத்தை தொடர்ந்து ரசாயன ஆலையை 3 மாதம் வரை தற்காலிகமாக மூடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags :