கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜக இளைஞர் போராட்டம்.
கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, முன்னாள் முதல்வரும் ,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த அதிமுகவைசேர்ந்த தினேஷ்.பொன்ராஜ்.ராம்குமார்.ஆர்.பி.பொன்ராஜ் மற்றும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகையிட்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்யிடம் மனு அளித்தனர்.இதனைத்தொடர்ந்து ஈபிஎஸ் உருவப்படத்தை
எரித்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் 4 பேரை கைது செய்தது, காவல்துறை.இந்த சம்பவம் குறித்து பெரியகுளத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜகவினர் வழங்க வேண்டும்; உணர்ச்சிவசத்தில், கட்சிக் கொள்கைக்கு எதிராக பாஜகவினர் செயல்பட வேண்டாம்.என கோவில்பட்டியில் நடந்த எடப்பாடி பழனிசாமி படத்தை பாஜகவினர் எரித்தது குறித்த கேள்விக்கு பெரியகுளத்தில் அண்ணாமலை பதிலளித்தார்.
Tags :













.jpg)





