இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 19-06-2024 11:25:20am
இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால் அந்த விமானம் நேற்று (ஜூன்18) இரவு 10.30 மணியளவில் மும்பையில் பத்திரமாக தரையிறங்கியது. இது குறித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறங்கியதாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இண்டிகோ விமானம் 6E 5149-க்கு இந்த மிரட்டல் வந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தரையிறங்கிய பிறகு, குழுவினர் நெறிமுறையைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories