by Staff /
07-07-2023
12:26:53pm
தெலுங்கானாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்துள்ளது. யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள பகிடிப்பள்ளி பகுதி மற்றும் பொம்மைப்பள்ளி பகுதிகள் இடையே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்ட காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாரிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி, இரண்டு பெட்டிகளில் இருந்த பயணிகளை விரைவாக இறக்கினர். இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.
Tags :
Share via