அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்- அமைச்சர் சிவசங்கர்

by Staff / 08-08-2024 03:36:15pm
அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்- அமைச்சர் சிவசங்கர்

2026 தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே 'ஜெய்ஸ்ரீராம்' சொல்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, "பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். முதலில் அவர் அப்டேட் ஆகட்டும்" என அமைச்சர் சிவசங்கர் பதிலத்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர், "பிரதமர் மோடியே ராமரை விட்டு விட்டு 'ஜெய் ஜெகநாத்' என கூற ஆரம்பித்துவிட்டார் . உங்கள் தலைவரே ராமரை கைவிட்டுவிட்டு கட்சி மாறிவிட்டார். முதலில் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்" என பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via