தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பசுமை பாரத மக்கள் கட்சி தனித்துப் போட்டி.

பசுமை பாரத மக்கள் கட்சியின் முப்பெரும் விழாவானது தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது.பசுமை பாரத மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆறுமுகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவின்போது, பசுமை பாரத மக்கள் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து, 2026 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் அரசியல் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பசுமை பாரத கட்சியை சேர்ந்த 38 மாவட்ட செயலாளர்கள் உட்பட பல்வேறு முக்கிய மாநில நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பசுமை பாரத மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கூறும் போது,
அனைவருக்குமான சமூகநீதி என்ற அடிப்படையில் பசுமையான தமிழகம் , பசுமையான பாரதம் என்கின்ற.உயரிய நோக்கத்தோடு மாற்றுமுறை அரசியல் கட்சியாக பசுமை பாரதம் கட்சியானது செயல்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தனிமனித முன்னேற்றம்.குடும்பத்தின் முன்னேற்றம், குடும்பத்தின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்கின்ற அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அறிக்கை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது எனவும் அதை காப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான பொறுப்பு என்பதால் அதை வலியுறுத்தி பசுமை பாரதம் கட்சி தங்களது அரசியலை முன்னெடுக்கும்.
மேலும், 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதியிலும் தனித்து தேர்தலை சந்திக்கும் கோட்பாட்டில் நாங்கள் எப்பொழுதும் நிலையாக உள்ளோம் என அவர் தெரிவித்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் சிவகுமார் மாநில பொருளாளர் கோபி கண்ணன் மாநில இணை பொது செயலாளர் ஏழுமலை மாநில அமைப்பு செயலாளர் ஆறுமுகம் திருநெல்வேலி கந்தன் தூத்துக்குடி தமிழன் பாலா வெழிநாடு உறவு. சுந்தரம் மதுரை ஜெகதீசன் திருச்சி மாணிக்க விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags : Green Bharatiya Makkal Katchi to contest all 234 seats in Tamil Nadu