திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா

by Admin / 07-07-2025 09:19:57am
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா சிறப்பான முறையில் நடந்து வருகின்றது. அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக கருதப்படும் திருச்செந்தூர் திருக்கோவில் முருகப்பெருமான் குன்றுதோறும் இருக்கின்ற குமரா என்று போற்றுவதற்கு மாறாக, திரு சீர்  அலைவாய் என் அழைக்கப்படும் திருச்செந்தூரில் பள்ளி கொண்டிருக்கும் தமிழ் கடவுளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்த்த பெறும் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .உலகம் எங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்குடமுழுக்கு பெருவிழாவில் கலந்துகொண்டு முருக கடவுளை தரிசிப்பதற்காக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருவி 5,500 திற்கு அதிகமான காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via