துணை முதல்வருக்கு மீண்டும் சிபிஐ சம்மன்

by Staff / 18-02-2023 12:23:43pm
துணை முதல்வருக்கு மீண்டும் சிபிஐ சம்மன்

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிபிஐ தலைமையகத்தில் நடைபெறும் விசாரணையில் அவர் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'சிபிஐ விசாரணைக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. எனது வங்கி லாக்கரை சோதனை செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன்' என ட்வீட் செய்துள்ளார்.

 

Tags :

Share via
Logo