கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்.

by Editor / 28-03-2023 09:59:00am
கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்.

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் உள்ள அரசு பாதுகாப்பு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடினர். அவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி சென்றவர்களை பிடிக்க வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக 6 சிறார் கைதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo