உரிமம் இல்லாமல் சுமார் 20லட்சம் மதிப்பிலான பட்டாசு-ஆசிரியர் கைது. 

by Staff / 04-10-2025 11:36:34pm
உரிமம் இல்லாமல் சுமார் 20லட்சம் மதிப்பிலான பட்டாசு-ஆசிரியர் கைது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருவண்ணாமலை சேவூர் பைபாஸ் சாலையில் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏழுமலை என்பவர் நடத்தி வருகின்றார்.

மேலும் வருகின்ற 20ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரணி மற்றும்சுற்று வட்டார பகுதியில் பட்டாசு கடைகள் வைக்கபடும்.மேலும் ஆரணி அடுத்த சேவூர் பைபாஸ் சாலையில் உரிமம் இல்லாமல் பட்டாசு கடை இயங்குவதாக சென்னை ஐ.ஜிக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கபட்டுள்ளன.

இதன் எதிரொலியால் தனிப்பபடை போலீசார் உரிமம் இல்லாமல் இயங்கிய பட்டாசு குடோனை ஆய்வு செய்தனர். இதில் உரிமம் இல்லாமல் சுமார் 20லட்சம்மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தன.இந்நிலையில் உரிமம் இல்லாமல் இயங்கிய பட்டாசு கடையை ஆரணி வருவாய் துறை
முன்னிலையில் தனிப்படை போலீசார் சீல் வைத்து சுமார் 20லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கடையின் உரிமையாளர் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஏழுமலை என்பவர் மீது  உரிமம் இல்லாமல் பட்டாசு பதுக்கி வைத்திருந்தாகவும்,வெடிக்கும் பொருளை பதுக்கி வைத்திருந்தாகவும் கூறி வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில்
அடைத்தனர்.

ஆரணியில் உரிமம் இல்லாமல் குடோனில் 20லட்சம் மதிப்பிலான பட்டாசு பதுக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்த சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

Tags : உரிமம் இல்லாமல் சுமார் 20லட்சம் மதிப்பிலான பட்டாசு-ஆசிரியர் கைது. 

Share via