பத்திரிகையாளருக்கு 25 ஆண்டுகள் சிறை

by Staff / 18-04-2023 11:25:13am
பத்திரிகையாளருக்கு 25 ஆண்டுகள் சிறை

ரஷ்ய அரசை விமர்சித்த பத்திரிகையாளர் விளாடிமிர் காரா முர்சாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தேசத்துரோக வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக விமர்சித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். போர் குறித்து விமர்சனக் கட்டுரைகள் எழுதிய முர்சா, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினையும் விமர்சித்தார். ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலும் மறுத்தார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் - ரஷ்ய போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via
Logo