மனிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு

by Staff / 18-04-2023 11:31:52am
மனிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 27 வரையும், அமலாக்கத்துறையின் வழக்கில் ஏப்ரல் 29, 2023 வரையும் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் நீட்டித்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories