இந்தியாவில் மருத்துவ கல்வி நிறுவனங்களை ஆதரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும் பிரதமர் மோடி

உலக அளவில் மருத்துவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நம் நாட்டில் மருத்துவ கல்வி நிறுவனங்களில் அதிகரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகள் குறித்து வலையரங்கை தொடங்கி வைத்து பேசிய பிரதமர்.
இந்திய மாணவர்கள் மருத்துவ கல்வி கற்க மொழி வேறுபாடுகளைக் கடந்து சிறிய சிறிய நாடுகளுக்கு செல்வதால் நம் நாட்டில் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.
அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி மாநில அரசு கொள்கைகளை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
ஆயிஷா மருத்துவம் உலகளவில் அங்கிகாரம் பெறதொடங்கி உள்ளதாக தெரிவித்த பிரதமர் உலக சுகாதார மையம் முதன்முதலாக பாரம்பரிய மருத்துவ மையத்தை இந்தியாவில் தொடங்குவதை நினைத்து பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
Tags :