குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்குகுளிப்பதற்கு தடை.

by Editor / 12-07-2024 09:43:20pm
 குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்குகுளிப்பதற்கு தடை.

தென்காசி மாவட்டத்தில் தொடர் சாரல் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக காணப்பட்டு வருகிறது.மேலும் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் வெயில் அதிகமாக இருந்த நிலையில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை முதல் தென்காசி மாவட்டத்தில் தொடர் சாரல் மழை பெய்து வந்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகள் வெள்ளப்பெருக்கு காரணமாக இஸ்லா பயணிகள் குளிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கானது சீரான நிலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும். மேலும் தற்போது சாரல் மழையுடன் இதமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது

 

Tags : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு

Share via