தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் .

by Admin / 05-02-2024 11:24:05am
தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் .

தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அறிவியல் இயக்க மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டினை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் பிரச்சார உபகுழு மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய மாநாட்டில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் நாயகம் தலைமையில் மாவட்டச் செயலாளர் சுரேஷ் பாண்டி முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், காந்திநகர் கிளைச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் .
 

Tags :

Share via