செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு நீதிபதி கேள்வி

by Staff / 08-01-2024 12:29:53pm
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு நீதிபதி கேள்வி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய முடியாதவர்கள் எதற்கு வழக்கு தொடர்கிறீர்கள்? என அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி 3வது முறையாக தாக்கல் செய்த மனு இன்று (திங்கள்கிழமை) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

 

Tags :

Share via