சபரிமலையில் மேற்கூரையில் இருந்து குதித்த கர்நாடக பக்தர் பலி.
கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயில் மாளிகப்புரம் அருகே கோயிலின் மேற்கூரையில் இருந்து குதித்த 40 வயது பக்தர் உயிரிழந்தார். இறந்தவர் கர்நாடகாவின் கனகபுராவை சேர்ந்த குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (டிச., 16) மாலை 6.30 மணியளவில் மேற்கூரையில் இருந்து குமார், 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் அவருக்கு கை, காலில் காயம் ஏற்பட்டது. கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
Tags : சபரிமலையில் மேற்கூரையில் இருந்து குதித்த கர்நாடக பக்தர் பலி.