பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

by Editor / 17-06-2022 11:44:09am
பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பள்ளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சோகம் பாளையத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்தாமரைக் கண்ணன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் போலீசார் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி அடுத்து கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது

 

Tags :

Share via