அதிமுக வேட்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

மதுரை அ.தி.முக. வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு மதுரை எம்.பி நிதி ரூ.17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ரூ.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சரவணன் கூறியுள்ளார். ரூ.17 கோடியில் ரூ.16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன . அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் தனது கண்களையும் திறந்து பார்க்க மறுக்கிறார் என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.
Tags :