சித்திரை திருவிழா-சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக முதல் முறையாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி மே 10 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 7.55 மணிக்கு மதுரைக்கு வந்தடையும்,மே 12 ஆம் தேதி மதுரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 7.50 மணிக்கு தாம்பரம் சென்றடையும்,குளிர்சாதன பெட்டிகள், சாதாரண முன்பதிவு பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் என 20 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது
Tags : சித்திரை திருவிழா-சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.