அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வி .கே .சசிகலா ஆகியோருக்கு இடமே இல்லை.

by Admin / 08-01-2026 03:44:53pm
 அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வி .கே .சசிகலா ஆகியோருக்கு இடமே இல்லை.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு விமான நிலையத்தில்  சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் விளக்கியதாக கூறினார்.. அமித்ஷா சமீபத்தில் தமிழக மந்தபோது தனக்கு சேளம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே திட்டமிட்ட பொதுக் கூட்டங்கள் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை என்றும் அதற்காகவே இப்போது டெல்லி வந்து சந்தித்ததாகவும் தெரிவித்தார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும் இந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என் று உறுதியாக தெரிவித்ததோடு பாமக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டதாகவும் இன்னும் பல கட்சிகள் விரைவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார் .அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வி .கே .சசிகலா ஆகியோருக்கு இடமே இல்லை என்றும்  டிடி..வி தினகரன் கூட்டணியில் இடம் பெறுவாரா என்று கேட்டதற்கு கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் .அது பற்றி இப்பொழுது பகிரங்கமாக சொல்ல முடியாது. எதையும் உறுதிப்படுத்தப்பட்டவுடன் உங்களிடம் தெரியப்படுத்துவோம் என்றும் தெரிவித்ததோடு தன் உள் கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்று அமித்ஷா தன்னிடம் தெளிவாக கூறிவிட்டதாகதெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories