திருமணம் நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் விபத்து ஒருவர் காயம்

by Staff / 23-05-2024 02:48:33pm
திருமணம் நிகழ்ச்சிக்கு சென்ற வாகனம் விபத்து ஒருவர் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் அருகே இன்று காலை திருமணம் நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைத்து சென்ற வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டதோடு வாலிபர் ஒருவருக்கும் கால் எலும்பு முறிந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via