by Staff /
27-06-2023
02:25:36pm
சேலம் கொண்டலாம்பட்டி பகுதிகளில் குட்கா விற்கப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் ஜி. கே. கரட்டூர் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 32), பெரிய புத்தூரை சேர்ந்த பூபதி (53) ஆகிய இருவரது கடைகளிலும், சிவ தாபுரத்தை சேர்ந்த பழனிசாமி. நடுவனேரியை சேர்ந்த தயாளன் ஆகியோரது கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அந்த கடைகளில் இருந்த தலா 10 பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags :
Share via