by Staff /
27-06-2023
02:37:21pm
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 36 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியதால் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா தொற்று தற்போது தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
Tags :
Share via