பெண்கள் இந்தியாவில் ஒரு வலிமைமிக்க சக்தியாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்
இன்று சர்வதேச மகளிர் தினம். கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது .பெண்கள் இந்தியாவில் ஒரு வலிமைமிக்க சக்தியாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களால் முடியாது என்று எதுவும் இல்லை என்கிற நிலைநோக்கி அவர்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது .நேற்று வரை, அவர்களால் இதை செய்ய முடியாது என்கிற கட்டுப்பாடுகள் இன்றைக்கு தகர்க்கப்பட்டு இருக்கின்றன. அவர்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்கிற நிலையில் பாதுகாப்புத் துறை, அறிவியல் துறை ,தொழில் துறை, நிர்வாக துறை என அனைத்திலும் அவர்கள் தங்கள் சக்திகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்கிற காலமெல்லாம் மலையேறி.... இன்றைக்கு ஆணை விட பெண் கல்வியின் விகிதம் அதிகரித்து இருக்கின்றது. அவர்களுடைய ஆற்றல் சக்தியை, இந்த சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.
Tags :



















