ஈரான் முன் வைத்துள்ள சமீபத்திய படிப்படியான அமைதி திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் இடையே ஆன மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அது உலகளாவிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன் வைத்துள்ள சமீபத்திய படிப்படியான அமைதி திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ஈரானின் இந்த திட்டம் ஹார்முஸ் நீர் இணையை திறப்பதற்கும் போரை நிறுத்துவதற்கும் வழி வகுத்தாலும் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சு வார்த்தைகளை ஒத்துழைக்க கோருவதால் ட்ரம்ப் இதில் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஈரான் தனது யுரோனியம் செறிவூட்டலை நிறுத்துவதற்கும் அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவதற்கும் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில் ட்ரம் உறுதியாக உள்ளார் ஈரான் ஒரு வீழ்ச்சி நிலையில் இருப்பதாகவும் அதனாலேயே அவர்கள் ஹார்ஸ் நீர் நிலையை விரைவில் திறக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக கூறி அமெரிக்க கடற் படையினர் அரபிக் கடலில் ஈரானிய கொடி ஏந்திய கப்பல்களை சோதனையிட்டு சிறை பிடித்து உள்ளன. எம்/வி டவ்ஸ்கா என்ற கப்பலை அமெரிக்க கடற்படை வழிமறித்து சோதனை இட்டது இதற்கு பதிலடியாக ஈரான் தனது எல்லையில் சில வெளிநாட்டு வணிக கப்பல்களை சிறை பிடித்து உள்ளது. இந்த மோதலால் ஹார்மோஸ் நீர்நிலைப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்களால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரிக்க காரணமாகி உள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே அணுசக்தி விவகாரத்தில் தனது சிவப்பு கோடுகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :

















