“இந்து சமயங்களை பொன்முடி இழிவுபடுத்தியுள்ளார்” - உயர் நீதிமன்றம் கருத்து

by Editor / 23-04-2025 04:28:04pm
“இந்து சமயங்களை பொன்முடி இழிவுபடுத்தியுள்ளார்” - உயர் நீதிமன்றம் கருத்து

திமுக அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணையில், அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. “பொன்முடியின் பேச்சுக்கள் பெண்கள், சைவ, வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. புனிதமான பட்டை, நாமத்தை விலைமாது சேவையுடன் ஒப்பிட்டு பொன்முடி பேசியிருக்கிறார். மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார். ஆபாசம் மட்டும் அல்ல இரு சமயங்களை சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையிலும் பொன்முடி பேசியிருக்கிறார்” என்றார்.

 

Tags :

Share via