தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையத்திற்கு அடுத்துள்ள கட்டிடங்களில் பிரபல தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான தீப்பெட்டி மற்றும் அச்சகத் தொழிற்சாலை முன்பாக செயல்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக அச்சகமும், தீப்பெட்டி தொழிற்சாலையும் இயங்காமல் மூடப்பட்ட நிலையில் கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. அந்த இடத்தை வேறொரு தரப்பு விலைக்கு வாங்கியுள்ள பட்சத்தில், முன்பிருந்த தீப்பெட்டி தொழிற்சாலையின் மீதமுள்ள தீக்குச்சிகளும், தீப்பெட்டி உற்பத்தி செய்ய தேவையான சில மூலப்பொருட்களும் பாழடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதியினுள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அந்த மூலப் பொருள்களில் உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுமளமள பற்றி எரிந்த தீ அடர்த்தியான கரும் புகையுடன் கட்டிடத்திலிருந்து வெளியேறியது. வெளியேறிய கரும்புகை பேருந்து நிலைய சாலை வளாகம் முழுவதும் பரவியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தண்ணீரைபீச்சியடித்து தீயையும், கரும்புகையையும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :