"அதிமுகவை விழுங்க முயற்சிப்பதே பாஜக திட்டம்"விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

அதிமுக என்ற மிகப்பெரிய கட்சியை மொத்தமாக விழுங்குவதே பாஜகவின் இன்றைய உடனடித் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், '65 எம்எல்ஏக்கள் கொண்ட ஒரு பெரிய கட்சி தேய்ந்துபோக அதிமுக உடன்படுகிறதா?' என வினவிய அவர், 'சமூக நீதிக்கு எதிராக பாஜக தொடர்ந்து பேசி வருகிறது. அதே அரசியலை வேறு பெயரில் பேசினால் அவர்கள்தான் பாஜகவின் பி டீம்' என அதிமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
Tags :