நாங்குனேரியில் பெட்ரோல் குண்டுவீசி இருவர் கொலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி,தமிழக வெற்றி கழக தலைவர்விஜய் கண்டனம்

by Admin / 03-03-2026 10:59:32am
நாங்குனேரியில் பெட்ரோல் குண்டுவீசி இருவர் கொலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி,தமிழக வெற்றி கழக தலைவர்விஜய் கண்டனம்

திருநெல்வேலி நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு நிகழ்ந்த கொடூரமான தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது பெரும்பத்து கிராமத்தில் ஆறு முதல் ஒன்பது பேர் கொண்ட கும்பல் பொதுமக்களை நோக்கி அறிவாளர்களால் சரண்ரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் உள்ளூர் நபர் ஒருவரும் வட மாநில தொழிலாளி ஒருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் மேலும் அஞ்சுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் அண்மை காலங்களில் காவல்துறையின் மீது தாக்குதல் மற்றும் தொடர் கொலைகள் நடப்பதையும் குற்றம் சாட்டி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாங்குநேரி பெரும் பத்து பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த கவலை அளிப்பதாகவும் உலக நாடுகளோடு போட்டி போடக்கூடிய தமிழ்நாட்டில் சட்டம் ஒழங்கு காக்கும் நிரந்தர டி.ஜி.பி ஏன் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

 

 

Tags :

Share via

More stories