ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு - நீர்வீழ்ச்சி போல் வெளியேறிய தண்ணீர்
கர்நாடகா அருகே ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய குடிநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு சாலையில் ஓடுகிறது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா தாலுகா பாபுராயன்கொப்பலு கிராமம் அருகே பைபாஸ் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீர்வீழ்ச்சி போல் வெளியேறி வருகிறது.
உடைப்பு ஏற்பட்ட குழாயினை சரி செய்ய அதிகாரிகள் வராததால், சுமார் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் பாய்ந்து வீணாகி வருகிறது. சாலையில் தேங்கிய குடி தண்ணீரில் வாகனங்கள் மிதந்தவாறே சென்றன. இதற்கிடையே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் குடிநீர் குறித்து, நடவடிக்கை எடுக்காத குடிநீர் வடிகால் வாரியம் துறையின் அலட்சியம் அப்பகுதி மக்களை அதிருப்தி அடையவைத்துள்ளது.
Tags :