ரவுடி கொலை வழக்கு: ஒருவா் கைது 4 பேர் தலைமறைவு

by Staff / 24-02-2023 12:58:52pm
ரவுடி கொலை வழக்கு: ஒருவா் கைது 4 பேர் தலைமறைவு

மதுரையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் ஒருவரை கைது செய்தனா். இதுதொடா்பாக, மேலும் 4 பேரைத் தேடிவருகின்றனா். மதுரையில் ரெளடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் ஒருவரை கைது செய்தனா். இதுதொடா்பாக, மேலும் 4 பேரைத் தேடிவருகின்றனா்.
மதுரை உத்தங்குடி அருகே உள்ள உலகனேரி செங்குந்தா் நகா் கன்னிமாரியம்மன் கோயில் தெருவைச் சோந்த குருநாதன் மகன் பாலமுருகன் என்ற டோராபாலா (30). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், ரெளடிகள் பட்டியலிலும் இடம் பெற்றாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வளா்நகா் ராஜீவ்காந்தி நகா் பகுதியில் நண்பா்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் பாலமுருகன் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது தந்தை குருநாதன் அளித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா்.விசாரணையில், பாலமுருகன், தனது நண்பா் வினோத்தின் தாய் குறித்து அவதூறாகப் பேசியதால், வினோத், மாரி, விஜயராகவன், சூா்யா, ஜெகதீஸ்வரன் ஆகிய 5 பேரும் இணைந்து மதுப் புட்டிகள், கத்தியால் பாலமுருகனை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகதீஸ்வரனை (26) போலீஸாா் கைது செய்தனா். மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனா்.

 

Tags :

Share via

More stories

Logo