பள்ளி கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்

by Admin / 05-01-2026 07:18:46pm
பள்ளி கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்

இன்று சென்னை டி பி ஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 11 நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  டிசம்பர் 26 ஆம் தேதி இடைநிலை பனி மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது . 2009 ஜூன் ஒன்றுக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றை கோரிக்கை. அதன் காரணமாக கடந்த 11 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்ற ஆசிரியர்களின் போராட்டம் பேச்சு வார்த்தையின் மூலம் நல்ல முடிவு எட்டப்படும் என ஆசிரியர் சங்கங்கள் எதிர்பார்க்கின்றன. அமைச்சர் தரப்பு நிதி துறையுடன் கலந்து ஆலோசித்து விரைவில் சுகமான தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.

 

 

Tags :

Share via
Logo