பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் ஆதரவு: அமெரிக்கா ஆய்வில் தகவல்

by Staff / 31-08-2023 12:47:29pm
பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் ஆதரவு: அமெரிக்கா ஆய்வில் தகவல்

அமெரிக்காவைச் சேர்ந்த பியூ என்ற ஆராய்ச்சி மையம் பிரதமர் நரேந்திர மோடி குறித்தான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்தியா உள்பட 24 நாடுகளில் 30,861 பேர் இந்த ஆய்வில் கலந்துக்கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வு முடிவில், பத்து இந்தியர்களில் எட்டு பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐந்தில் ஒருவர் மட்டுமே மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via