கோவை வீடுகளில் கொள்ளை- மூன்று கொள்ளையர்களை காவல்துறையினர் சுட்டு ப்பிடித்தனர்
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை அடித்த உத்தர பிரதேசத்தைச் சார்ந்த மூன்று கொள்ளையர்களை காவல்துறையினர் சுட்டு ப்பிடித்தனர்
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் போட்டு இருந்த 13 வீடுகளை குறிவைத்து 53 சவரன் நகைகள் 29 கிராம் வெள்ளி மற்றும் சுமார் 2 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த உத்தர பிரதேசத்தை சார்ந்த ஆசிப், இர்ஃபான் மற்றும் ஆரிப் இடம் மூன்று பேரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினருக்கு வந்த புகார்களின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். புண்ணிய முத்தூருக்கு அருகில் குளத்துப்பாளையம் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருந்த வீட்டை காவல்துறையினர் கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது கொள்ளையர்கள் தலைமை காவலர் பார்த்திபன் என்பவரை அறிவாளால் வெட்டி தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது தற்காப்புக்காக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூவரின் காலில் முழங்காலுக்கு கீழே காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மூன்று கொள்ளையர்களை கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தலைமை காவலரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். தற்பொழுதுதான் ஜாமினில் வெளியே வந்தவர்கள் என்றும் விசாரையின்போது தெரிய வந்தது.
Tags :



















