சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு

by Editor / 27-11-2021 10:44:11pm
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு என அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via