மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்தன.
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று மசோதாக்களும் சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்தன. மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறு வரையறை ஆகிய மூன்றும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட்டன ..அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தன. இந்த மசோதாக்களை அறிமுகம் செய்வதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 281 பேரும் எதிராக 185 பேரும் வாக்களித்தனர். பாராளுமன்றத்தில் 540 எம்பிக்களில் 438 எம்பிக்கள் மட்டுமே வருகை புரிந்து இருந்தனர் .102 எம்பிக்கள் அவைக்கு வரவில்லை.
Tags :



















