வேன் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
கோவை மாவட்ட வால்பாறை மலைப்பகுதியில் இன்று மாலை சுற்றுலாவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த வேனில் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா வந்துள்ளனர் .டெம்போ வேனில் 13-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.800 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. காவல்துறையும் தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவலின் படி 9 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதில் ஏழு பெண்கள் அடங்குவர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Tags :


















