பெண்களை கேடயமாக பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

by Admin / 17-04-2026 11:42:01pm
பெண்களை கேடயமாக பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தி  குற்றம் சாட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறு வரையறை தொடர்பான திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆவேசமாக உரையாற்றினார். இந்த மசோதா பெண்களுக்கான அதிகாரம் பற்றியது அல்ல. மாறாக, பெண்களை கேடயமாக பயன்படுத்தி இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தொகுதி மறு வரையறை மூலம் தென் மாநிலங்கள் ,வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயல் என்றும் அவர் தெரிவித்தார். மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வர விரும்பினால் 2036-ல் நடைமுறைப்படுத்துவதற்கு பதில் இப்பொழுதே கொண்டு வர வேண்டும் என்றும்  மாநிலங்களை பாதிக்கக்கூடிய தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இந்த விவாதத்தின் பொழுது பிரியங்கா காந்தியும் நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 தொகுதிகளிலேயே 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை ஏன் உடனடியாக அமல்படுத்த கூடாது என்றும் கேள்வி எழுப்பியதோடு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறு வரை காத்திருக்காமல் தற்போது இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதோடு 2036 அல்லது அதற்கு பிறகு தான் இது நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுவது பெண்களுக்கு செய்யப்படும் அணுகு என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo