பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது - வைகோ

by Staff / 24-12-2023 01:53:31pm
பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது - வைகோ

மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, இளைஞர்கள் தந்தை பெரியாரை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். ஆனால் சில கூட்டம் திட்டம் போட்டு பெரியார் சிலையை அவமதிப்பு செய்கின்றனர். மேலும் பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் எனக்கூறி அவமதிப்பு செய்தால் அவர்களது கை இருக்காது என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via