துப்பாக்கியுடன் கோவிலுக்கு வந்த எம்.எல்.ஏவின் தம்பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு வடமாநில பக்தர் ஒருவர் வந்திருந்தார். அப்போது அவரை சோதனை செய்தபோது இடுப்பில் கைதுப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில் அவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர பட்டேலின் சகோதரர் நிரஞ்சன் பட்டேல் என்பதும், பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸுடன் வைத்திருப்பதாக தெரியவந்தது. துப்பாக்கி கோவிலுக்குள் அனுமதி இல்லை என கூறிய பிறகு அவர் துப்பாக்கியை பொருட்கள் பாதுகாக்கும் இடத்தில் வைத்துவிட்டு சாமி தரிசனம் செய்தார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags :