குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியாவை பணியிடை நீக்கம் செய்து சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இந்த பொறுப்பில் சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் நித்யா பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :