தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு வெடிகள் வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்த ஆட்சியர் அனுமதி.

by Editor / 27-04-2023 11:59:22pm
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்திற்கு வெடிகள் வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்த ஆட்சியர் அனுமதி.

நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் சூழலில், இந்த படத்திற்கான படப்பிடிப்பானது தென்காசி மாவட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.

 மத்தளம்பாறை பகுதியில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய எல்கைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பெரிய கோவில் போன்ற செட் மற்றும் பெரிய கிராமம் போன்ற செட் அமைத்து படப்பிடிப்பானது நடைபெற்று வரும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது பெரிய அளவிலான வெடி வெடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.

 இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து தடை செய்யப்பட்ட வனப்பகுதி அருகே இதுபோன்ற வெடி வெடிக்கும் காட்சிகளை எப்படி எடுக்கலாம் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தன.

 இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் மத்தளம்பாறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்திருந்த நிலையில் அனுமதி கோரி பட குழுவினர்சென்னை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.

 அந்த மனு மீதான விசாரணையின் போது வனத்துறை, பொதுப்பணித்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட துறையினரின் தடையில்லா சான்று கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர், இந்த நிலையில் தற்போது மூன்று துறையினரின் தடையில்லா சான்றை படக்குழுவினர் பெற்றுள்ளனர்.

அந்த சான்றுகளை தற்போது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிம் படக் குழுவினர் ஒப்படைத்த நிலையில்நாளை முதல் படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி உள்ளார்.

மேலும் படப்பிடிப்பின் போது வெடி வெடிக்க போன்ற காட்சிகள் உள்ளிட்டவைகள் நடத்தக்கூடாது எனவும் தீ பிலம்புகளை கக்குவது போன்ற காட்சிகளும் படமாக்க கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளை மாவட்ட ஆட்சியர் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

 அதை ஏற்றுக் கொண்ட பட குழுவினர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via