கடலோர காவல்படை 25-வது டைரக்டர் ஜெனரலாக ராகேஷ் பால் நியமனம்.

இந்திய கடலோர காவல்படையின் 25-வது டைரக்டர் ஜெனரலாக ராகேஷ் பால் புதன்கிழமை நியமிக்கப்பட்டார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்திய கடற்படை அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் ஜனவரி 1989 இல் இந்திய கடலோர காவல்படையில் (ICG) பிரிவில் பணியில் சேர்ந்தார். அவர் இந்திய கடலோர காவல்படையின் முதல் துப்பாக்கி சுடும் வீரராக அங்கீகரிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் இருந்து எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் ஃபயர் கண்ட்ரோல் சொல்யூஷன் கோர்ஸ் முடித்தார். 34 ஆண்டுகால இந்திய கடற்படை பணியில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
Tags : கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரலாக ராகேஷ் பால் நியமனம்.