திருமண விழாவிற்கு நடப்பட்ட கொடி கம்பத்தின் மீது மின்கம்பி உரசியதில் இளைஞர்பலி.

திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் வயது 25. இதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் இல்ல திருமண விழா இன்று நடைபெற உள்ள நிலையில் திருவாரூர் கும்பகோணம் சாலையில் இரும்பு கம்பியால் ஆன திமுக கொடிக்கம்பம் நடபட்டு இருந்தது.
இந்த நிலையில் மணக்கால் அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த கோகுல் என்கிற இளைஞர் கொடி கம்பத்தை பிடித்த பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தாழ்வாக மின் கம்பி சென்றதன் காரணமாக கொடிக்கம்பத்தில் மின்கம்பி உரசி மின்சாரம் தாக்கப்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல். பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோகுல் உடல் வைக்கப்பட்டுள்ளது
Tags : திருமண விழாவிற்கு நடப்பட்ட கொடி கம்பத்தின் மீது மின்கம்பி உரசியதில் இளைஞர்பலி.