கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை?  அமைச்சர் பொன்முடி

by Editor / 28-06-2021 03:43:26pm
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை?  அமைச்சர் பொன்முடி

 


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்தபேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது,
ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சிபிஎஸ்.இ மதிப்பெண்கள் வெளிவரும். அதன் முடிவுகள் வெளிவந்த பின்னர் கல்லூரி சேர்க்கை பணிகளை தொடங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளதால்  அதற்கு முன்னரே தனியார் பள்ளிகள் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட கூடாது.
ஆனால் அதே நேரத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.அதற்கு எந்த பிரச்சனையும் இல்லை.பொறியியல் கல்லூரிகள் வழக்கமான செயற்கை முறை தொடரும்.
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக எந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது அவ்வாறு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதல் தலைமுறை மாணவர்களுக்காக ஏற்கனவே கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் தொடரும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo