புதுவகை கொரோனா;  தற்காத்துக் கொள்ளும்  முறைகள்  என்ன ?- விஞ்ஞானிகள் விளக்கம் 

by Editor / 24-07-2021 03:36:37pm
 புதுவகை கொரோனா;  தற்காத்துக் கொள்ளும்  முறைகள்  என்ன ?- விஞ்ஞானிகள் விளக்கம் 



கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.நாளுக்கு நாள் கொரோனாவின் புதிய வகைகள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனாவின் புதிய வகைகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கொரோனா தொற்றை எதிர்கொள்ள, முறையான முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்டவைகளே சிறந்த வழி என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் ஒருவருக்கும் மற்றவருக்கும் சுமார் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்று சர்வதேச சுகாதார அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.


அதே நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானக் குழு ஒன்று, கொரோனா வைரஸ் தொற்றானது 6 அடியைத் தாண்டியும் பரவக்கூடும். காற்றில் வைரஸ் மிதந்து எதிர்பாராத வகையில் மற்றவர்களை பாதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரத்தில், ‘முறையான காற்றோட்ட வசதி இல்லாத இடங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்ப்பது, முறையான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவையை செய்து வந்தால் தொற்றிலிருந்து நம்மை போதுமான அளவு தற்காத்துக் கொள்ள முடியும்’ என்று விஞ்ஞானக் குழு அறிவுரை கூறியுள்ளது.

 

Tags :

Share via